மெல்லிய ஓசை - அவள்
காதில் கேட்கிறது..
மாதங்களாக நேசித்து - உன்
கையில் அரவணைத்து - இன்று
பூமித்தாயை முத்தமிடவா
தூக்கிஎறிந்தாய் என்னை - நானும்
உனக்கு சுமையகினேனோ?
நங்கையும் ஒலிகேட்டுத்
திரும்பினாள்!- தன்
பையில் இட்டாள்!
அரவணைத்தாள்!
வீடு சென்றாள்!
ஊன்றினாள் பூஞ்செடியினுள்ளே ! -அந்த
மை முடிந்த பேனாவை!