அண்மையில் செர்ரி பூக்களின் மலர்வினை கொண்டாடும் Cheery Blossom Festival ஒன்றினை பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்தது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள Auburn தாவரவியற் பூங்காவில் இது நடைபெற்றது.
செர்ரி பூக்கள் ஜப்பானின் உண்மையான தேசிய மலராக இல்லாவிட்டாலும் தேசிய மலருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எதற்கும் உண்டு எனலாம். இளஞ்சிவப்பு இதழ்களைக் கொண்ட அழகிய பூக்கள். பெண்களுக்கு இளஞ்சிவப்பினை பொதுவில் பிடிக்கும் அல்லது பெண்களை பொதுவில் குறிப்பிட இந்த நிறத்தினை சொல்வது என்னவோ உண்மைதான். இவை இலைதுளிர் காலத்தினை வரவேற்கப் புதுப்பொலிவுடன் பூத்துக் குலுங்கி நிற்பதைக் கண்டு மயங்காதோர் எவரும் இருக்க முடியாது.














