ஜூலை மாதத்தின் முதல் திகதி! இன்றிலிருந்து அண்ணளவாக 7 வீதத்தினால் பஸ் கட்டணம் அதிகரிக்கின்றது. எப்போதும் பஸ் கட்டணம் செலுத்தி பயணிக்கும் பயணி என்ற ரீதியில் ஓர் அலசல். இதுவரை 6,9,12, 15, 18 என்றவாறாக அமைந்த பஸ் கட்டணங்கள் இன்றில் இருந்து 7,10,13,16 என்று ஒரு ரூபாவாலும், இருபது ரூபாவில் இருந்தவை இரண்டு ரூபாவாலும் என்றவாறாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அது எல்லாம் இருக்கட்டும்! இவ்வளவு நாளும் நாம் கூடுதலான ரூபாய்களை கொடுத்து மீதிப்பணத்தினைக் கேட்டால் ஏதாவது ஒரு சில ரூபாய்களை விழுங்கி விட்டுத் தான் தருவார்கள். ஒவ்வொரு நாளும் காலையில் பத்து ரூபாய் கொடுத்தால் எப்போதாவது தான் ஞானம் பிறந்தது போன்று ஒரு ரூபாய் மீதி தருவார்கள் நேற்று வரை. ... குறைந்தது ஒரு ரூபாய் தராவிட்டாலும் மாற்றிய பணம் இல்லை என்று ஒரு மரியதைக்காவது சொல்லலாமே... பரவாயில்லை... சொல்லாவிட்டாலும்.... ஏதோ தாங்கள் பெரியவர்கள் மாதிரி அதட்டி கொள்வதில் என்னதான் இன்பமோ ..... இவ்வாறு ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலுமாக இரண்டு ரூபாய்.. ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது ரூபாய்கள்.....ஒருவரிடம் மட்டும் என்றால் எத்தனை பேர் இவ்வாறோ?
இப்போது ஏழு ரூபாய் கட்டணத்தில் பத்து ரூபாய் கொடுத்தால் மீதியாக மூன்று ரூபாய் தருவார்களா??? இல்லை இரண்டு ரூபாயா??

No comments:
Post a Comment